124 Inspiring Motivational Quotes in Tamil

Motivational Quote Image

124 Inspiring Motivational Quotes in Tamil

124 Inspiring Motivational Quotes in Tamil

இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்று நினைத்து விட்டாலே நம்மால் துணிவோடு போராட முடியும்

உன் தோல்விக்கான காரணத்தை நீயே அறியும் பொழுது உனக்கான வெற்றி என்பது உறுதியாகிறது..

உன் நம்பிக்கையை கொண்டு நீ போராடினால் உனக்கு உறுதுணையாக நான் இருக்கிறேன் இப்படிக்கு தன்னம்பிக்கை

இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் எதிரிகள் உண்டு எதிரிகள் இல்லை என்றால் உன் இலக்கை நோக்கி நீ எந்த வித முயற்சியும் எடுக்கவில்லை என்றே அர்த்தம்…

உன் இலக்கை அடைவதற்கு நீ உன்னோடு உன் தன்னம்பிக்கையை மட்டும் கூட்டிச்செல் உன் இலக்கை எளிதில் அடையலாம்

உன் வெற்றியை காண ஒரு சிலர் மட்டுமே இருக்கிறார்கள் ஆனால் உன்னுடைய தோல்வியை காண இவ்வுலகமே காத்திருக்கிறது உன் தோல்வியை ஒருபோதும் இவ்வுலகிற்கு காட்டாதே..

என்னை வெல்ல இவ்வுலகத்தில் என்னைத் தவிர வேறு எவரும் இல்லை என்று நினைத்துக் கொண்டாலே உன்னை வெல்ல இவ்வுலகில் எவரும் இல்லை…

நாம் யாருக்கும் எதிரியாக இருக்கக் கூடாது என்று நினைப்போம் ஆனால் நீ களத்தில் ஒருவரை சந்தித்தால் அவர் கண்ணோட்டத்தில் நீ ஒரு எதிரியாகவே கருதப்படுவாய்

உன்னுடைய அடையாளம் இவ்வுலகிற்கு தெரியும் வரை போராடு நீ யார் அதுவே உன் அடையாளம்

உன் இரண்டு கையை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காமல் இருந்தால் உலகையை வெல்லலாம்

இவ்வுலகில் யாவரையும் சாதாரணமாக எண்ணாதே தெருவில் இருக்கும் காகிதமும் ஒருநாள் பட்டமாக உயரத்தில் பறந்தால் தான் தெரியும் அதன் உயரம்

உன்னுடைய குறி நீ ஒருபோதும் தவறவிடுவதில்லை நீ குறி சரியாக வைக்கவில்லை என்பதே அதன் உண்மை

எனக்கென நேரம் அமையவில்லை என்று காத்திருப்பவர்கள் மத்தியில் எனக்கான நேரம் ஒவ்வொரு நொடியும் என்று நினைப்பவர்களே சாதிக்கின்றனர்

ஒருவருடைய நல்லொழுக்கம் அவருடைய பணத்தை வைத்து முடிவு செய்வது அல்ல அவருடைய குணத்தை வைத்து முடிவு செய்வது

உன்னுடைய எளிமையை பொறுத்து உன்னுடைய வலிமையை இவ்வுலகம் தீர்மானிக்கும்..

உன்னுடைய வறுமையைப் போக்க உன்னுடைய எளிமையை உன்னுடன் வைத்துக்கொள் உன்னுடைய வறுமையை வெல்லலாம்

இவ்வுலகில் உள்ளவர்கள் எல்லோரும் நல்லவராக எதிர்பார்க்கும் நாம் நாம் நல்லவர்களா என்று யோசிப்பதில்லை மாற்றம் நம்மில் இருந்து தொடங்கட்டும்

இருளை சந்திக்கும் ஒவ்வொரு இரவும் அதன் விடியலை சந்திக்கிறது அது போலத்தான் துன்பம் என்ற இருளை சந்திக்கும் ஒவ்வொருவரும் அதன் விடியலையும் விரைவில் சந்திப்போம்…

உன் வெற்றிக்கான காரணம் நீயே என்றால் உன் தோல்விக்கான காரணமும் நீயே..

நீ விழுந்தால் இந்த உலகம் எனக்கானது அல்ல என்று நினைக்காதே இவ்வுலகமே உனக்கானது தான் நீ எழுந்தாள்

உன்னை தாழ்த்தினால் வளைந்து உடைவதற்கு நீ கிளை அல்ல வேர் என்று நிரூபித்துக் காட்டு…

நீ வெற்றி பெறுவதற்கான காரணம் உன் விடாமுயற்சியே தவிர உன் அதிர்ஷ்டம் அல்ல

பறப்பதற்கு ஆசைப்பட்டு இருப்பதை இழந்து விடாதே என்று சொல்லுவார்கள் பறப்பதற்கு ஆசைப்படு அப்போதுதான் நீ நடக்கவாவது செய்வாய்..

கிணற்றில் நீந்த கற்றுக் கொள்வதற்கு தான் கயிறு தேவைப்படுகிறது கடலில் அல்ல…

காயங்களும் தழும்புகளும் உன் தோல்வியின் அடையாளம் அதுவே உனது வெற்றிக்கான ஒரு ஆரம்பம்….

உன்னை தாழ்த்தினால் உடைவதற்கு நீ கிளை அல்ல ஆணிவேர் என்று இவ்வுலகிற்கு சொல்…

வாழ்க்கையில் விட்டுக் கொடுப்பது ஒன்றும் தவறல்ல ஆனால் அதற்கு அவர்கள் தகுதியானவர்களா என்று பார்..

இவ்வுலகிலேயே நிம்மதியான அவர்கள் ஞாபக மறதி உள்ளவர்களே…

நம் வாழ்க்கையில் நாம் ஒருபோதும் மறக்கக்கூடாதவர்கள் அன்பை தருவபவர்களைவிட அவமானத்தை தருபவர்களை..

உன்னை தனித்து விடுவதே நீ சிறகை விரிப்பதற்கு தானே தவிர உன் சிறகை உடைப்பதற்காக அல்ல…

சில தோல்விகளும் நல்லதுதான் அந்த தோல்விகளை எதிர் கொள்ளும் போதுதான் உன் திறமைகளை வெளிப்படுகிறது…

உன்னை கீழே தள்ளி புதைத்தவர்களுக்கு தெரியாது நீ யாரெனறு ஒரு நாள் மண்ணை பிளந்து நீ வெளியே வரும்பொழுது தெரியும் நீ விதை என்று..

உனக்கு சிறகே இல்லை என்றாலும் நீ பறக்கலாம் தன்னம்பிக்கை எனும் சிறகு உன்னிடம் இருந்தால்….

உன் வலியும் வேதனையும் உன்னை செதுக்கும் “உளி” உளியின் வலியை தாங்க கற்கள் என்றும் மண்ணில் சிலையவதில்லை…

124 Inspiring Motivational Quotes in Tamil

மண்ணில் உன்னை தூக்கி எறிவது விதைப்பதற்கு தானே தவிர புதைப்பதற்கு அல்ல.

நான் பல முறை தோற்றவன் தோல்வியை நினைத்து எனக்கு பயமில்லை என்று நினைப்பவனுக்கே வெற்றி நிச்சயம்..

வீழ்வது ஒன்றும் வீழ்ச்சி அல்ல விழுந்து கிடப்பதே வீழ்ச்சி இதை உணர்ந்தவன் ஒருபோதும் வீழ்வதில்லை..

இவ்வுலகத்தை மாற்றவேண்டும் என்று நீ விரும்பினால் அந்த மாற்றம் உன்னில் இருந்து தொடங்கு..

124 Inspiring Motivational Quotes in Tamil

ஒரு முறை வெற்றி பெற்றவர்களை விட ஆயிரம் முறை தோல்வி பெற்றவர்களே சாதனையாளர்களாக உருவாகின்றனர்.

வெற்றியும் நிரந்தரமல்ல தோல்வியும் நிரந்தரமல்ல முயற்சி உன்னிடம் இருந்தால் வெற்றி என்றும் நிரந்தரம்…

தோல்வியை நினைத்து எனக்கு கவலை இல்லை வெற்றி தராத ஒன்றை தோல்வி எதுக்கு தந்துள்ளது அதுவே “அனுபவம்”

தோல்வி என்பது இருள் வெற்றி என்பது வெளிச்சம் தோல்வியின் இருளிலிருந்து வெற்றி எனும் வெளிச்சத்திற்கு நீ வரும்வரை போராடு

உனக்கான ஒன்றை ஒருவன் தட்டிப் பறிப்பதால் அவன் வாழ போவதுமில்லை.. உனக்கான ஒன்றை நீ விட்டு கொடுப்பதால் நீ வீழ போவதுமில்லை..

உன் கஷ்டத்தில் உன்னை “கை” விட்டவர்களுக்கு நன்றி சொல்..ஏன் என்றால் அவர்கள் உன் தன்னம்பிக்”கை”யை உனக்கு காட்டியவர்கள்..

நாம் செய்வது தவறு என்று பிறர் சுட்டிக்காட்டத வரை அது தவறு என்று நாம் தெரிந்து கொள்ளப் போவதில்லை

உன் வாழ்க்கையில் உனக்கு துன்பங்களுக்கு மேல் துன்பம் வந்தது கொண்டு இருக்கிறது என்றால் இன்பம் உன்னை தேடி வரப்போகிறது என்று அர்த்தம்..

உன்னுடைய சோதனையில் தான் உன்னால் சாதனை படைக்க முடியுமே தவிர உன்னுடைய வேதனையில் அல்ல..

124 Inspiring Motivational Quotes in Tamil

உனக்கானது வெற்றியோ அல்லது தோல்வியோ நீ எடுக்கும் முயற்சியே அதைத் தீர்மானிக்கிறது…

தன்னம்பிக்கையே தலைக்கனமோ எதை உன்னுடன் நீ வைத்துக் கொள்கிறாயோ அதைப் பொறுத்தே உனக்கான பலன் கிடைக்கும்…

காலத்தோடு நகர்வதல்ல வாழ்க்கை நம்பிக்கையோடு நகர்வதே வாழ்க்கை..

உன் வலியும் வேதனையும் ஒன்று திரட்டி நீ வெற்றியடைவதற்கான பலத்தை உருவாக்கு..

உன் விடாமுயற்சியையும் சகிப்புத்தன்மையும் கண்டு தோல்விதன் பயப்பட வேண்டுமே தவிர நீ அல்ல..

ஒரு நிமிடம் தான் உள்ளது என்று குறைவாக எண்ணாதே அறுபது நொடி உள்ளது என்று மிகையாக எண்ணிப்பார் முடியாதது என்பது எதுவும் இல்லை…

உனக்கே தெரியாமல் நீ செலவு செய்து கொண்டிருக்கிறாய் பணம் அல்ல நேரம்

124 Inspiring Motivational Quotes in Tamil

நீ நீயாக இருக்கும் வரை உன்னை வெல்ல யாருமிலலை நீ மற்றவர்களை போல மாற நினைத்தாள் முதல் தோல்வி உனக்குத்தான்..

வலியும் வேதனையும் உன்னை எரிகிறது என்றால் நீ பிரகாசமாக ஒளிற போகிறாய் என்றே அர்த்தம்…

விருப்பம் இல்லாமல் செய்தால் சிறு கல்லையும் நகர்த்த முடியாது விருப்பத்தோடு செய்தால் பெரிய மலையும் உன்னால் தகர்த்தேறிய முடியும்…

இவ்வுலகில் சாதித்தவர்கள் அனைவரும் விடாமுயற்சியால் மட்டுமே தானே தவிர அதிர்ஷ்டத்தை வைத்து அல்ல..

உன் திறமையின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் எவராக வேண்டுமானாலும் இருக்கலாம் அது நீயாக மட்டும் இருந்து விடாதே…

124 Inspiring Motivational Quotes in Tamil

என் முன்னே எவ்வளவு பெரிய தடை இருந்தால் எனக்கென்ன எனக்கு தேவையானது சிறு துளையே..

உன் திறமை என்னவென்று முதலில் நீ உணர்ந்து கொள் பிறகு மற்றவருக்கு நிரூபிக்கலாம்..

தன் கையை நம்பி தோற்றவர்கள் கூட இவ்வுலகில் உண்டு தன்னம்பிக்கையை நம்பி தோற்றவர்கள் இவ்வுலகில் எவருமில்லை..

உன்னை எதிர்ப்பவன் பலம் பொருந்தியவனாக இருந்தாள் நீ அவனை வீழ்த்த வேண்டியது உன் பலத்தை வைத்து அல்ல அவன் பலவீனத்தை வைத்து…

வலி எனும் உளியை தாங்கும் கல்தான் சிலை ஆகிறது..

சுமைகளை சுமப்பது கூட சுகம் என்று நினைப்பவர்களுக்கு சுமைகளும் இன்ப சுகமே…

124 Inspiring Motivational Quotes in Tamil

உன்னுடைய முயற்சியில் வெற்றிகள் தவறலாம் விடாமுயற்சி என்றும் தவறக் கூடாது…

உன் விடாமுயற்சியால் தோல்வியும் உன்னிடம் தோற்றுப்போகும் வரை முயற்சி செய்து கொண்டே இரு..

தன்னம்பிக்கை எனும் விதையை விதைத்து தடைகள் எனும் பாறையை உடைத்து செல்பவனுக்கே வெற்றி நிச்சயம்…

கீழே விழுவது ஒன்றும் தோல்வி அல்ல கீழே விழுந்தாலும் எழாமல் இருப்பதே தோல்வி..

இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற துணிச்சல் உன்னிடம் இருந்தால் எப்போதும் எதையும் நீ இழக்க்கமாட்டாய்..

நீ விதைப்பது விதையோ அல்லது வினையோ அதன் பலன் உன்னையே சாரும்..

உன்னை எதிர்த்து நிற்பவரை பார்த்து பயப்படாதே உன்னை வெல்ல உன்னைத் தவிர வேறு எவரும் இல்லை என்ற எண்ணத்தை உருவாக்கு…

உன்னை எதிர்ப்பவன் பலம் பொருந்தியவனாக இருந்தால் நீ எதிர்த்து நில் நீ எதிர்த்து நின்றாலே அவன் தன்னம்பிக்கையும் சிறிது குறையும்.

இவுலகில் உள்ள சாதனையாளர்கள் அனைவரும் ஒரு முறை வெற்றி அடைந்தவர்கள் அல்ல பல முறை தோல்வி அடைந்தவர்களே..

124 Inspiring Motivational Quotes in Tamil

கையை ஊன்றி நீ எழுந்தால் விழுந்து விடுவோமோ என்று நினைத்திருந்தால் இன்றும் நீ குழந்தையாகவே இருந்திருப்பாய்…

இவ்வுலகில் உள்ள எல்லோரும் தீக்குச்சி தான் உராய்வு எனும் வாய்ப்பு கிடைக்காதவரை..

வாழ்க்கையில் ஒவ்வொருவரும் வெற்றி அடைய தோல்வி எனும் படி மிதிக்க வேண்டியிருக்கிறது.

உன் முயற்சிகள் அனைத்தும் பயனில்லை என்று நினைக்காதே அதில் நீ பெற்ற அனுபவங்களை உனக்கு பயனளிக்கும்..

நீ ஆபத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறாய் எனில் அது ஆபத்து என்று நீ உணராத வரை உனக்கு ஆபத்து இல்லை

உனக்கென அடையாளத்தை உருவாக்க என்றும் உன் விடாமுயற்சியை உன்னுடனே வைத்துக்கொள்..

உன்னால் முடியாது என்று நீ யோசித்தால் நீ முயற்சிக்கும் முன் யோசி நீ முயற்சித்த பின் யோசிக்காதே…

இன்று எளிமையை சந்தித்தவர் எவரும் நாளை வறுமையை சந்திப்பதில்லை

உன்னால் ஒரு தவறு நடக்கிறது என்றால் அது உன்னால் திருத்திக் கொள்ளவும் முடியும்..

உன்னுடைய முயற்சியில் நீ வெற்றிபெற வேண்டும் என்றால் உன்னை நீயே ஒரு முறை சோதித்துக் கொள்..

உன் முயற்சிக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்..உன் முயலாமைக்கு ஒரே காரணம் நீ முயற்சிக்காமல் இருப்பதே…

124 Inspiring Motivational Quotes in Tamil

வெற்றிடம் இருந்து தலைகணத்தையும் தோல்வியிடம் இருந்து தன்னம்பிக்கையும் கையாள கற்றுக் கொள் நிரந்தர வெற்றி என்றும் உனக்கே..

நேற்று உனக்கு கிடைத்த அவமானம் என்பது ஒரு “விதை” இன்றே அதை மண்ணில் “புதை” நாளை வரலாறு பேசும் உன் “கதை”

நீ இன்று தோற்றதால் அவமானம் உனக்கு பிடிக்காமல் போகலாம். ஆனால் அடுத்த ஒவ்வொரு நொடியும் அந்த அவமானமே உன் வெற்றிக்கு வழிவகுக்கும்..

124 Inspiring Motivational Quotes in Tamil

உன் அடையாளத்தை எப்பொழுதும் யாருக்காகவும் மாற்றிக் கொள்ளாதே அப்படி நீ மாற்றிக் கொண்டால் உனக்குள் இருக்கும் உனக்கே உன்னை பிடிக்காமல் போகலாம்.

தோல்வி முயன்றவனுக்கும் கிடைக்கும் முயலதவனுக்கும் கிடைக்கும் நீ முயன்றவன் என்றால் அத்துடன் உனக்கு அனுபவமும் கிடைக்கும்…

முட்களையும் கையால் பிடிக்கலாம் அதை கையாளும் திறமை உன்னிடம் இருந்தால்..

உன்னுடைய அனைத்து முயற்சிகளும் தோல்வியுற்றால் நீ மாற்ற வேண்டியது, உன் இலக்கை அல்ல உன்னுடைய முயற்சியை..

ஒவ்வொரு இரவிற்கும் விடியல் என்பது நிச்சயம் உண்டு.. அதுபோல ஒவ்வொரு விடா முயற்சிக்கும் வெற்றி என்பது நிச்சயம் உண்டு..

124 Inspiring Motivational Quotes in Tamil

தன்னால் முடியாது என்று நினைத்தவரை தவிர தோல்வி எவருக்கும் நிலையானது அல்ல..

உன் தோல்வியில் உனக்கு கிடைத்த அவமானத்தை அவமானமாக எடுத்துக் கொள்ளாமல் அனுபவமாக எடுத்துக் கொள்…

பல முயற்சியில் தோல்வியை கண்டு வெற்றி பெற்றவர்களே இன்று சாதனையாளர்கள்..

உனக்கு கிடைத்த அவமானத்திடம் இருந்து அனுபவம் என்ற பாடத்தை கற்றுக் கொள்…

124 Inspiring Motivational Quotes in Tamil

உன் தன்னம்பிக்கைக்கு ஈடான உன் விடா முயற்சியே உன் வெற்றிக்கு வழிவகுக்கும்..

ஒவ்வொரு விடியலையும் நீ வென்று கொண்டு தான் இருக்கிறாய் உன் சோம்பலை தோற்கடித்து

உன் முயற்சி தோல்வி அடைந்தாலும் அந்த முயற்சியுடன் உன் பயிற்சியை சேர்த்துக் கொள் அடுத்த வெற்றிக்கு உன்னை வழிநடத்தும்.

உன்னிடம் மன வலிமையும் தன்னம்பிக்கையும் இருக்கிறது என்றால் உனக்கு ஏற்படும் துன்பங்களை உன்னால் சரி செய்து கொள்ள முடியும்..

உனக்கு ஏற்பட்ட துன்பங்களிடமிருந்து நீ கடந்து செல்வதற்கு உன்னிடம் உன் மன தைரியம் மட்டும் இருந்தால் போதும்

எவருடைய துணையும் இல்லாமல் தனியே நின்றாலும் தன்மானத்தோடு நில்

ஒரு கையை இழந்தவர்கள் கூட இவ்வுலகில் வாழ முடியும். தன்னம்பிக்கையை இழந்தவர்கள் இவ்வுலகில் வாழ்வது என்பது கடினம்.

உனக்கான வெற்றி என்பது கடைசி ஒரு நொடியில் கூட உனக்காக காத்திருக்கலாம் இறுதிவரை போராடு வெற்றி நிச்சயம்..

124 Inspiring Motivational Quotes in Tamil

உன் கனவு எட்டாத தூரத்தில் இருந்தாலும் நீ எட்டி பிடிக்கலாம் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் உன்னிடம் இருந்தால்.

வெற்றி உனக்கானது என்று உன் எதிரி நினைக்கும் வரை போராடு…

உன் தகுதியை நீ புரிந்து தோல்வியும் வெற்றியும் உனக்குத் தேவைப்படுகிறது..

ரோஜா எனும் வெற்றியை நீங்கள் அடைய வேண்டும் என்றால் முட்கள் எனும் வலியை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும்…

நீ அடைந்த தோல்விகள் அனைத்தையும் அவமானங்களாக பார்க்காதே அனுபவங்களாக பார்.

நாளை உனக்கான வழிகள் வேண்டுமென்றால் இன்று உனக்கான வலிகளை நீ ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

அவநம்பிக்கையை தகர்த்து தன்னம்பிக்கையை நிலை நிறுத்து நாளை வெற்றி என்றும் உன் வசம்…

உன் தோல்வியில் நீ கற்றுக் கொள்ள வேண்டியது பாடங்களை மட்டுமல்ல அனுபவங்களையும் தான்.

தோல்வி எனும் எரிபொருளே வெற்றி எனும் விண்ணில் உன்னை ஏற்றி விடுவதற்கு தான்..

குளத்தில் நீந்தும் மீனாக மாட்டிக் கொள்ளாதே கடலில் நீந்தும் மீனாக உன்னை மாற்றிக் கொள்.

உன் திறமையின் மேல் உனக்கு சிறிது சந்தேகம் இருந்தாலும் முயற்சிக்காதே முதல் தோல்வி உனக்குத்தான்…

உன் எதிரியை நீ வீழ்த்த வேண்டும் என்றால் அவன் பலத்தை வைத்து அல்ல அவன் பலவீனத்தை வைத்து..

உன் லட்சத்தை அடையயும் முயற்சியில் நீ ஒவ்வொரு முறையும் தோற்றுக் கொண்டிருக்கிறாய் எனில் உன் லட்சியத்தை விடாதே அதுவே உன் லட்சத்திற்கான முதல் படி..

எப்போழுதும் உன் முன்னேற்றத்தை பற்றி மட்டும் யோசி அதையும் முன்நோக்கியே யோசி

வெற்றியை பஞ்சக மாற்றி அதை காற்றில் பறக்க விடு தோல்வியை விதையாக மாற்றி உன் நெஞ்சில் புதைத்து விடு

உனக்கு கை கொடுப்பவனும் உனக்குள் தான் இருக்கிறான் உன் காலை வரிவிடுபவனும் உனக்குள் தான் இருக்கிறான்உன்னை ஏற்றி விடுவதும் கைதான் உன்னை இறக்கி விடுவதும் கைதான்.. தன்னம்பிக்”கை” அவநம்பிக்”கை”

நேற்று நாம் தோல்வியிலிருந்து கற்றுக் கொண்ட பாடம் மட்டுமே இன்றைய வெற்றி

124 Inspiring Motivational Quotes in Tamil

உன் லட்சியத்தை அடைய கனவு காண உன்னால் முடிகிறது என்றால் பிறகு ஏன் உன் லட்சியத்தை உன்னால் அடைய முடியாமல் போகிறது

உன்னை அவமானப் படுத்தியவர்களை அடிப்பது பதிலடி அல்ல அவர்கள் முன் வாழ்ந்து காட்டுவதே அதற்கான பதிலடி…

More Inspirational Quotes

Ability Achieve Afraid Ambition Attempt Conquer Courage Create Decision Defeat Disappointment Dream Enemy Failure Fall Fear Finish Goal Hope Impossible Insult Learn Life Mind Morning Obstacles Opportunity Patience Present Prove Self-Confidence Shame Strength Struggle Success Suffering Talent Think Time Try Upset Victory Women's Day Worry Wounds

📧 தொடர்புக்கு (Contact & Social Media Links): 📩 Email: cantact@ayy.co.in 📸 Instagram: @AyyPalOfficial 📘 Facebook: @AyyPalOfficial 📍 Pinterest: @AyyPalOfficial 🌐 Website: www.ayypal.com ▶️YouTube: @AyyPalOfficial

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top